அல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களாக காட்டுத்தீ காரணமாக அல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 6ம் திகதி 110 இடங்களில் ஏற்பட்டிருந்த காட்டுத் தீ சம்பவங்கள், தற்பொழுது 55 ஆக குறைவடைந்துள்ளது.
இவற்றில் 16 இடங்களில் கட்டுக்கடங்காத அளவில் தீ பரவுகை காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக அல்பர்ட்டாவில் மழையுடனான காலநிலை காரணமாகவும் காட்டுத் தீ ஆபத்து குறையத் தொடங்கியுள்ளது.
அல்பேர்ட்டாவில் காட்டுத் தீ காரணமாக ஒரு மில்லியன் ஹெக்ரயர் காடுகள் தீக்கிரையாகியுள்ளன.
எவ்வாறெனினும் காட்டுத் தீ சம்பவங்கள் தற்போதைக்கு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.