பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம்.
இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். தொடர்பாக லாகூர் கோர்ட்டில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டது. தற்போது இம்ரான்கான் ஜாமினில் உள்ளார்.
அதேவேளை தனது ஆதரவாளர்கள் வீதிகளில் இறக்கி போராட வேண்டுமென இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.