Home கனடா கனடாவில் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு…….

கனடாவில் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு…….

by Jey

கனடாவில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவோருக்கு வெகுமதிகளை வழங்குவதாக அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் பீக் நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

முற்கொடுப்பனவு அடிப்படையிலான கடன் அட்டைகள் வெகுமதியாக வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக காற்று சீராக்கிகள் பயன்படுத்துவதனை வரையறுத்துக் கொள்ளும் மற்றும் மின்சார பயன்பாட்டை வரையறுத்துக் கொள்ளும் பயனர்களை இந்த வெகுமதி வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு பீக் பாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

சக்தி வளத்தை குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கு விரும்பும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது காற்று சீராக்கியின் மத்திய கட்டமைப்பின் அல்லது வெப்ப உற்பத்தியாக்கியின் பிரதான அலகில் தெர்மோஸ்டாட் கருவியை பொருத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்து கருவி wi-fi தொழில்நுட்பத்தின் ஊடாக காற்று சீராக்கிகள் கட்டுப்படுத்தப்பட உள்ளன.

related posts