கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் நோயாளிகள் சிகிச்சைக்காக கூடுதல் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண மருத்துவர்கள் இது தொடாபில் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் கூடுதல் நேரம் காத்திருக்க நேரிடுவதாக கல்கரி மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நோயாளிகளின் காத்திருப்பு நேரம் தொடாபில் 200 மருத்துவர்கள் கடிதமொன்றையும் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு தற்போதைக்கு தீர்வு காண முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் நோயாளிகள் பதினைந்து மணித்தியாலங்கள் வரையில் காத்திருக்க நேரிடுவதாக தெரிவித்துள்ளனர்.