இலங்கை பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களுக்கு இடையிலான “உயர் குருதி அழுத்த வினாடி வினா போட்டி 2023” இல் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழு வெற்றிபெற்றுள்ளது.
“பேராதனை உயர் குருதி அழுத்த ஆராய்ச்சி மையம்” ஏற்பாடு செய்த மருத்துவ பீடங்களுக்கு இடையிலான வினாடி வினா போட்டி நேற்று(28.05.2023) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உலக உயர் குருதி அழுத்த தினமான (17.05.2023)ஆம் திகதியை நினைவுகூறும் முகமாகவே இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கொழும்பு, பேராதனை, யாழ்ப்பாணம், ரஜரட்டை, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் குழு இதில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மருத்துவ மாணவர் அணி 2023 ஆம் ஆண்டிற்கான வினாடி வினா போட்டியின் வெற்றியாளர்களாக (Champion) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகம் சார்பாக சஹானா உமாசங்கர், ராஜபக்ஷ பத்திரனாலாகே இஷானி பிரபோதனி ராஜபக்ஷ, உதயகுமார் ஜதுஷன், நவரத்னராஜா துளசிஹான், தேனுக உருத்திரமூர்த்தி ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
மேற்படி மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் தேவையான வசதிகளையும் பேராசிரியர் இரா. சுரேந்திரகுமாரன், பேராசிரியர் தி.குமணன் , பேராசிரியர். ந.சுகந்தன் ,வைத்திய கலாநிதி வா.சுயனிதா மற்றும் வைத்திய கலாநிதி பிரம்மா தங்கராஜா ஆகியோர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.