கனடாவில் இயற்கை உணவு வகைகளுக்கு கூடுதல் வரவேற்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இளம் கனடியர்கள் இயற்கை உணவு வகைகளுக்காக அதிகளவில் செலவிட நாட்டம் காட்டுகின்றனர்.
கனடாவின் இளம் தலைமுறையினர் செயற்கையான உணவு வகைகளை நாடுவதில்லைஎன தெரிவிக்கப்படுகின்றது.
ரிசர்ச் கோ நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 18 முதல் 34 வயது வரையிலான வயதுப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் தலைமுறையினர் இயற்கை உணவு வகைகளுக்கு கூடுதலாக செலவிட ஆயத்தமாக உள்ளனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.