பிரித்தானியாவின் உணவுப் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு, செவ்வாய்க்கிழமை அதன் உச்சத்தை எட்டியதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது.
பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பு மற்றும் நீல்சன் நடத்திய ஆய்வில், ஒரு வருடத்திற்கு முன்பு உணவுக்காக சுமார் £20 செலவழித்த ஒருவர் இப்போது அதே பொருட்களுக்கு £23 க்கு மேல் செலவழிக்கிறார்.
ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட உணவுப் பணவீக்கத்தை விட மே மாதத்தின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது இந்தாண்டின் இரண்டாவது வேகமான அதிகரிப்பு ஆகும்.
ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இடையே கடைகளில் ஒட்டுமொத்த உணவு பணவீக்கம் 8.8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
NielsenIQ இன் வணிக நுண்ணறிவுத் தலைவர் மைக் வாட்கின்ஸ் கூறுகையில், “பணவீக்கத்தின் தாக்கத்தைத் தணிக்க, கடைக்காரர்கள் பருவகால விளம்பரங்களைத் தேடுவதன் மூலமும், சூப்பர்மார்க்கெட்களில் வழங்கப்படும் பொருட்களின் விலைக் குறைப்புகளைப் பயன்படுத்தியும் பணத்தை மிச்சப்படுத்துகிறார்கள்” என கூறியுள்ளார்.