அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அல்பர்ட்டா மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவடைந்து விட்டதாகவும் இனி முரண்பாடுகளையும் களைந்து மாகாணத்தின் முன்னோக்கிய நகர்விற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
மாகாண தேர்தலில் ஸ்மித் தலைமையிலான ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி வெற்றி பெற்றது.
தேர்தலில் தமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து மக்களுக்காகவும் தொடர்ந்தும் சிறந்த சேவையை வழங்க உள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்வதாக என்.டி.பி கட்சி தலைவர் ராச்செல் நொட்லி தெரிவித்துள்ளார்.