Home கனடா கனடாவின் மீது வெளிநாட்டு தலையீடுகள் குறித்த அறிக்கை தொடர்பில் அதிருப்தி

கனடாவின் மீது வெளிநாட்டு தலையீடுகள் குறித்த அறிக்கை தொடர்பில் அதிருப்தி

by Jey

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து விசாரணை செய்து, முன்னாள் ஆளுனர் நாயகம் டேவிட் ஜொன்ஸ்டன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

விசேட அறிக்கையாளராக செயற்பட்ட ஜொன்ஸ்டனின் நடுநிலைத்தன்மை குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வலியுறுத்தி என்.டி.பி கட்சி நாடாளுமன்றில் பிரேரணை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையிலிருந்து ஜொன்ஸ்டன் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென ஜக்மீட் சிங் வலியுறுத்தியுள்ளார்.

related posts