ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அண்மையில் முடிந்தது.ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வகை நடுவர்கள் உள்ளனர்.ஒன்று எலைட் பேனல் நடுவர். இரண்டாவது டெவலப்மெண்ட் நடுவர்.
முக்கிய போட்டிகளில் எலைட் நடுவர்கள் மட்டுமே களத்தில் நடுவர்களாக இருப்பார்கள்.எலைட் பேனல் நடுவர்களுக்கு முன்பு ஒரு போட்டிக்கு 175000 சம்பளம் தரப்பட்டது.
இப்போது 198000 ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது.இதோடு தனியாக 12500 ரூபாய் தனி ஊதியம் தரப்படும்.
டெவலப்மெண்ட் நடுவர்களுக்கு ஒரு நாள் தினசரி ஊதியம் எலைட் பேனல் நடுவர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு இருக்காது.டெவலப்மெண்ட் நடுவர்களுக்கு ஒரு நாளைக்கு 59000 ரூபாய் கிடைக்கும். முன்பு இந்த தொகை 40000 ரூபாய் ஆக இருந்தது.