உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இன்று அதிகாலை தொடர்ச்சியாக 17 முறை குண்டுகளை ரஷ்யா வீசியது. இந்த வான் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த குண்டு வீச்சில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.