உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்(Elon Musk) மீண்டும் முதலிடத்திற்கு முன்னெறியுள்ளார்.
இந்த பட்டியலில் இதுவரை முன்னிலையிருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 74 வயதான பேர்னட் ஆர்னோல்ட் (Bernard Arnault) என்பவர்.
பேர்னட் ஆர்னோல்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே அவ்வப்போது போட்டித்தன்மை நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.
Bloomberg Billionaires Index-இன் தற்போதைய கணக்கீட்டின் படி எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 192 பில்லியன் அமெரிக்க டொலராகவும் பேர்னட் ஆர்னோல்ட்டின் நிகர சொத்து மதிப்பு 187 பில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்படுகின்றது.
பேர்னட்டின் LVMH நிறுவனத்தின் பங்குகளின் சரிவு ஏற்பட்டதை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 500 பேரின் பெயர்களை Bloomberg Billionaires Index வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.