அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை அங்கீகாரம் அளித்துள்ளன.
அதன்படி, முதல் தடவையாக வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து அமெரிக்கா விடுபட்டுள்ளது.
கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசுக்கு அனுமதிக்கப்பட்ட 31.38 ட்ரில்லியன் டொலர் கடன் அளவை கடந்த ஜனவரியிலேயே அமெரிக்க அரசு நெருங்கிவிட்ட நிலையில் அமெரிக்க அரசு நிதி நெருக்கடிக்களை எதிர்கொண்டு வந்தது.
இந்த உச்சவரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது தொடர்பில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கர்த்திக்கும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. சில நிபந்தனைகளுடன் கடன் உச்சவரம்பை நீக்குவத்றகு மெக்கர்த்தி இணக்கம் தெரிவித்தார்.
எனினும், இதற்கான சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக குடியரசுக் கட்சியின் கடும்போக்கு உறுப்பினர்கள் சிலர் எச்சரித்திருந்தாலும் இச்சட்டமூலம் கடந்த புதன்கிழமை (31) பிரதிநிதிகள் சபையில் 314: 117 விகிதத்தில் நிறைவேற்றப்பட்டது.