கனடாவின் வின்னிபெக் மாகாணம் செயின்ட் போனிபேஸ் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி அங்குள்ள சுற்றுலாதலங்களில் ஒன்றான ஜிப்ரால்டர் கோட்டைக்கு மாணவர்கள் சென்றனர்.
அங்குள்ள 5 மீட்டர் உயர நடைபாதையில் ஏறி கோட்டையின் அழகை மாணவர்கள் ரசித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நடைபாதை இடிந்து விழுந்தது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த கோர விபத்தில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுடன் சென்ற ஆசிரியர் ஒருவரும் இடிபாடுகளில் சிக்கினார். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.