Home இந்தியா இந்தியாவை உலுக்கியுள்ள ஒடிசா இரயில் விபத்தில்…..

இந்தியாவை உலுக்கியுள்ள ஒடிசா இரயில் விபத்தில்…..

by Jey

ஒடிசா இரயில் விபத்தையடுத்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு விரைந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஒடிசா அரசுக்கு தமிழக அரசும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவை உலுக்கியுள்ள ஒடிசா இரயில் விபத்தில் உயிர் பிழைத்த தமிழர் சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தை சந்தித்தது.

மூன்று ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1000க்கும் அதிகமானோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.இந்த நிலையில் நடந்த சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்த பயணி வெங்கடேசன் விவரித்துள்ளார்.

நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன், இரண்டு பயணிகள் ரயிலுக்கு நடுவே சரக்கு ரயில் வந்துவிட்டதால் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 500 பேருக்கு இறந்திருப்பார்கள் என கருதுகிறேன்.நானும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளேன், பொது பெட்டியில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.

எங்கு பார்த்தாலும் சடலங்களாக உள்ளன என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.

related posts