Home இந்தியா ஒடிசாவில் இன்று அரசு சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஒடிசாவில் இன்று அரசு சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

by Jey

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரெயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரெயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரெயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கோரமான ரெயில் விபத்து காரணமாக ஒடிசாவில் இன்று ஜூன் 3-ந்தேதி, மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதையடுத்து ஒடிசாவில் இன்று அரசு சார்பில் நடைபெற இருந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts