உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அனிமேஷனில் கொடிகட்டி பறக்கின்ற நிறுவனமான த வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது நிருவனத்திலுள்ள நிர்வாகிகள் உட்பட 75 பதவிக்குறியவர்களை பதவி நீக்கம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த ‘லைட்இயர்’ என்ற அனிமேஷன் திரைப்படத்தின் வசூல் ரீதியான படுதோல்வியை முன்னிட்டே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.
‘டாய் ஸ்டோரி 4’ மற்றும் ‘கோகோ’ போன்ற புகழ்பெற்ற திரைப்பட அனிமேஸன் குழுவின், ஒரு பகுதியாக இருந்த 26 ஆண்டுகால அனிமேட்டரே ‘லைட்இயர்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
மேலும், 2015 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய விளம்பரத்தின் துணைத் தலைவரான மைக்கேல் அகுல்னெக்கும் இதில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக த ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், வால்ட் டிஸ்னியின் தலைமை நிர்வாகி பாப் இகெரின் முன்னர் அறிவித்தது போல, 7,000 வேலைகளை அகற்றி 5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம் எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2013ஆம் ஆண்டும் அனிமேஷன் தறையிலிருந்து 30 பேரை அதிரடியாக டிஹ்னி நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது