ஐக்கிய அமெரிக்காவின் லூசியானாவின் பகுதியில் மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கு தீபற்றி எரிந்தது.சார்லஸ் ஏரியில் உள்ள (Calcasieu) கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலேயே இவ்வாறு பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது பல அவசரகால பணியாளர்கள் மற்றும் பிற நிறுவன ஊழியர்கள் தீயை கட்டுபடுத்த கடுமையாக உழைத்து வருகின்றனர்.மேலும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற “கட்டாய வெளியேற்ற உத்தரவும் “ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் அப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் அப்புரப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.மேலும், இந்த விபத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் எண்ணெய் கிடங்கு முழுவதும் சேதமடைந்து பாரிய நஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தீயணைப்பு படை பிரிவினர் துரிதமாக செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.