Home உலகம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது

by Jey

ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார்.

அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்’ விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார்.

அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இந்திய-சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்’ என தெரிவித்தார்.

 

related posts