Home உலகம் சொகுசுக் கப்பலில் பயணித்த 300க்கும் மேற்பட்டோரை தாக்கிய மர்ம நோய்

சொகுசுக் கப்பலில் பயணித்த 300க்கும் மேற்பட்டோரை தாக்கிய மர்ம நோய்

by Jey

அமெரிக்க சொகுசுக் கப்பலில் பயணித்த 300க்கும் மேற்பட்டோரை மர்ம நோய்தொற்று ஒன்று தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Ruby Princess என்னும் சொகுசுக்கப்பலில், பெப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரையிலான காலகட்டத்தில் 2,991 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அப்போது, 284 பயணிகள் மற்றும் 34 பணியாளர்கள் மர்ம நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க நோய்த்தடுப்பு மைய அதிகாரிகள் அந்த கப்பலுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஆனால் எதனால் அந்த வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் நோரா வைரஸ் என்னும் கிருமியால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

related posts