Home இலங்கை யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்கள் இடை நிறுத்தல் தொடர்பில் தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்கள் இடை நிறுத்தல் தொடர்பில் தீர்மானம்

by Jey

யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரை மாணவர்களுக்கு எதிர்வரும் (01.07.2023) திகதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதை இடைநிறுத்தல் தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அரச அதிபர் தலைமையில் இன்றைய தினம் (09.06.2023) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

related posts