ரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இன்று போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (Iga Świątek), செக். குடியரசு வீராங்கனை கரோலின் முச்சோவா (Karolína Muchová) மோதவுள்ளனர்.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு பிரான்ஸின் பாரீஸ் நகரில் அமைத்துள்ள பிலிப்-சத்ரியர் (Philippe-Chatrier) விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரை இறுதியில் போட்டியில் செக். குடியரசின் கரோலினா முச்சோவாவும், பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலெங்காவும் மோதினர்.இதில் முச்சோவா 7-6, 6-7, 7-5 என் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரை இறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக்கும், பிரேசில் வீராங்கனை ஹடாட் மியாவும் மோதினர்.இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.