தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஏற்பட்ட நிலநடுக்கம், நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 5.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் அதிகாலை 2:38 மணிக்கு அல்லது 6:08 மணிக்கு மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் வணிக மையமான ஜோகன்னஸ்பர்க் அமைந்துள்ள Gauteng மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாகாணம் முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் நடுக்கத்தை உணர்ந்துள்ளனர். சிலர் சமூக ஊடகங்களில் சுவர்களின் சிறிய கட்டமைப்பு சேதங்களைக் காட்டும் படங்களை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தின்போது ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.