முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு அடுத்த வாரத்தில் மாகாண ஒன்றின் ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் செவ்வாய் கிழமை அவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பாஹாவில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.நவீன் திஸாநாயக்க சப்ரகமுவை மாகாண அளுநராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்த டிக்கிரி கொப்பேகடுவை 10 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக கூறி கடந்த 8 ஆம் திகதி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.