கனடாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணைகளுக்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனடாவின் மத்திய அரசாங்க அமைச்சர் அமைச்சர் டொமினிக் லிபிலான்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணைகளுக்கு அரசாங்கம் கதவுகளை திறந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இந்த விசாரணைகளை நடாத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலையீடுகள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்ட விசேட அறிக்கையாளர் டேவிட் ஜொன்ஸ்டன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலையீடுகள் பற்றிய பொது விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்குமாறு பிரதமர் தமக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக லிபிலான்க் தெரிவித்துள்ளார்.