கனடாவில் பாலியல் வழக்கில் தொடர்புடைய நபரின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரொரண்டோவில் இந்த சம்பவம் கடந்த மே மாதம் 28ஆம் திகதி நடந்துள்ளது.
இளம்பெண்ணொருவர் நள்ளிரவு 2 மணிக்கு சுரங்க இரயிலில் ஏறினார், பின்னர் வில்சன் இரயில் நிலையத்தில் அவர் இறங்கினார்.இரயில் ஏறியதில் இருந்து நபர் ஒருவர் தன்னை பின் தொடர்வதை அப்பெண் உணர்ந்திருந்தார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரித்து வரும் நிலையில் சந்தேக நபரின் புதிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பிலோ அல்லது சம்பவம் தொடர்பிலோ தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.