தென்கொரியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 4 பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின.
இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான கேங்வோனில் நேற்று பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 4 பஸ்கள் புறப்பட்டன.
இதில் ஒரு பஸ் ஹாங்சியோன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. எனவே முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக மோதியது.
இதனையடுத்து அதன் பின்னால் வந்த 3 லாரிகள் மற்றும் ஒரு கார் அதன் மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பஸ்சில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர்.
எனினும் இந்த சங்கிலித்தொடர் விபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பிவைத்தனர்.