கனடாவில் மிகவும் செலவு கூடிய நகரங்களாக டொரன்டோ மற்றும் பேங்க் வராகிய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உலகின் அதிக செலவு கூடிய நகரங்களின் வரிசையில் சர்வதேச அளவில் டொரன்டோ 90 ஆம் இடத்தை வகிப்பதுடன் கடந்த ஆண்டை விடவும் ஒரு படி முன்னேறி உள்ளது.கனடாவின் செலவுக்கு கூடிய இரண்டாவது நகரமாக வான்கூவார் பட்டியலிடப்பட்டுள்ளது.
உலக அளவில் செலவு கூடிய 227 நகரங்களில் வான்கூவார் 116ம் இடத்தை வகிக்கின்றது.கனடாவின் செலவு கூடிய நகரங்களில் வரிசையில் மொன்றியால் நகரம் மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
கனடாவின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் நான்காம் இடத்தை தலைநகரம் ஒட்டவாவும் ஐந்தாம் இடத்தை கல்கரியும் வகிக்கின்றன.
அண்மைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளின் நகரங்களை விட கனடாவின் நகரங்களில் செலவு குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.