Home இலங்கை இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்

இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்

by Jey

முதலாவது பெண், ஜனாதிபதி சட்டத்தரணியான சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) நேற்று (18.06.2023) இரவு காலமானார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் (19.06.2023) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் உடுவில் பிரதேச செயலக ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இவர் இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகால தலைவியாக இருந்த அவர், யாழ். மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.

சிறந்த சமூக சேவையாளரான இவர், சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்ட வழக்கில் பொதுமக்கள் சார்பில் இலவசமாக வழக்கினை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

related posts