Home இலங்கை யாழ்ப்பாண குடாநாட்டில் 769 புதிய வீடுகளை நிர்மாணித்து வழங்கிய இராணுவம்

யாழ்ப்பாண குடாநாட்டில் 769 புதிய வீடுகளை நிர்மாணித்து வழங்கிய இராணுவம்

by Jey

யாழ்ப்பாண குடாநாட்டில் இலங்கை இராணுவம் போரினால் இடம்பெயர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதன்படி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் வழிகாட்டலின் கீழ் வீடுகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள், தங்களுடைய பரஸ்பர நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதுடன், குடியிருப்பாளர்களின் தேவைகளுக்காக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக தங்கள் தொழில்நுட்ப அறிவையும் உழைப்பையும் வழங்கினர்.

அத்துடன், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பழங்கால நட்புறவை மீட்டெடுத்து, இராணுவத்தினரின் ஒருங்கிணைப்புடன் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு தென் பிராந்தியத்தில் உள்ள நன்கொடையாளர்கள் மற்றும் பரோபகாரர்களின் அனுசரணையையும் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் பாதி வரை, இராணுவம் 769 புதிய வீடுகளை நிர்மாணித்து வழங்கியதுடன், மேலும் நான்கு புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

related posts