இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மூன்று ஆண்டுகளில் உக்ரைன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவி செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
“சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023” எனும் மாநாட்டின் மூலமாக ரஷ்யாவுடனான போரில் பொருளாதார ரீதியாக நெறுக்கடிகளை சந்தித்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவே அம்மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், 61 நாடுகளை சேர்ந்த 1000 மேற்பட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள் என பலரும் அம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.