இந்தியா ‘ஸ்கை சோனிக்’’எனும் ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை தடுக்கும் ஏவுகணைகளை விரைவில் இந்திய எல்லையிலும் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ரஷ்யாவின் பகல் கனவை இந்தியா புரட்டிப் போட்டு விடும் நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் அதாவது ஒலியினை விட 5 மடங்கு வேகமாக செல்லும் அந்த ஏவுகணைகளை தடுக்கும் சாதனத்தை தயாரித்ததாக இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது.
இன்றைய சூழலில் உலகின் மிக வேகமான ஏவுகணை என்றால், ரஷ்யாவின், ஹைப்பர்சோனிக் ஏவுகணை மட்டுமே. இதனை தடுக்க இதுவரை வேறு ஏவுகணைகள் கண்டறியப்படவில்லை எனவும் ரஷ்யா அறிவித்திருந்தது.
ஆனால் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்ய ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகளை அமெரிக்க பேட்ரியாட் எளிதாக வீழ்த்தி வருகிறது. ஆனாலும் அந்தச் சோதனையில் முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. எனவே அமெரிக்காவின் பேட்ரியாட் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரான் தங்களிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உண்டு, 400 செகண்டில் இஸ்ரேலை அழிப்போம் என கொக்கரித்தது.
இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் முடிந்தால் எங்கள் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசிப்பார். அந்த ஏவுகணையினை வழிமறித்து உன் நாட்டு எல்லைக்குள்ளேயே, அதாவது உனது நாட்டை விட்டு வெளியேறும் முன்பே வீழ்த்தி காட்டுகிறேன் பார் என சவால் விட்டுள்ளது.
இஸ்ரேல் சொன்னதை தான் செய்யும். செய்வதை தான் சொல்லும். இது உலக நாடுகளுக்கு தெரியும்.
நாங்கள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வழிமறித்து அடித்து அழிக்கும் ஏவுகணைகளை தயாரித்து சோதித்து பெரும் வெற்றியை ஈட்டி விட்டோம் என்ற இஸ்ரேலின் அறிவிப்பினை கண்டு உலகமே அலறிக் கொண்டுள்ளது