நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் இதுவரையில் எவ்வித உறுதியான தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.
டைட்டானிக் கப்பல் இடிபாடுகளை பார்வையிடச் சென்ற சுற்றுலா பயணிகளை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் மாயமான விவகாரம் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நீர்மூழ்கி கப்பலின் அசைவிற்கு நிகரான ஓசை கேட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடிய ராணுவ கண்காணிப்பு விமானம் ஒன்று இந்த ஓசையை கண்காணித்துள்ளது.
வட அட்லாந்திக் கடற்பரப்பில் இந்த நீர் மூழ்கிக் கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக மாலுமி மற்றும் நான்கு சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்திருந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 3800 மீட்டர் ஆழத்தில் இந்த இடிபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி கப்பலில் காணப்பட்ட ஒட்சிசனின் அளவு வெகுவாக குறைவடைந்து செல்வதாகவும் நாளைய தினம் காலை வரையிலுமே ஒட்சின் கையிருப்பில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் இதுவரையில் திடமான தரவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.