இலங்கையில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14ம் திகதி வரையில் நீடிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரையில் இந்த பயணத்தடை நீடிக்கப்பட உள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சாவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 7ம் திகதி வரையில் இந்த பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
கொவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.