பொலன்னறுவை மனம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையின் பழைய தங்குமிடங்கள் இரண்டிலிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி குறித்த இரண்டு விடுதிகளிலும் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் 6 வருடங்களாக நிறுத்தப்பட்ட மற்றும் காலாவதியான மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், கையிருப்பு மருந்துப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தற்போது நாடானது மருந்து தட்டுப்பாட்டால் தவித்து வரும் இவ்வேளையில், கடந்த 2017ம் ஆண்டு இந்த மருந்துகளை வெளியிடாதது குறித்து உடனடி விசாரணை நடத்தி அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த மனம்பிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் பிரதம வைத்தியர் அசங்க,
அழிக்கப்பட்ட மருந்துகள் கடந்த 2017ஆம் ஆண்டில் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் காலாவதியான மற்றும் நிறுத்தப்பட்ட மருந்துகள் என தெரிவித்தார்.