புலம்பெயர் தமிழர்களால் நாட்டிற்கு பெரிதாக இலாபம் கிடைப்பதாக சொல்லிவிட முடியாது என கொழும்பிலுள்ள பிரபல உணவகத்தின் முகாமையாளரான மலையக தமிழர் சுப்பையா திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறை வேறு விதமாக மாறியுள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தற்போது வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தமது வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு பொருளாதார ரீதியாக சிக்கல்கள் எதுவும் இல்லை. இலங்கையிலுள்ள செல்வந்தர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.
தற்போது ஓரளவு பொருளாதார நிலையில் உள்ளவர்களே இருக்கின்றனர். புலம்பெயர் தமிழர்களால் நாட்டிற்கு பெரிதாக இலாபம் கிடைப்பதாக சொல்லிவிட முடியாது.
வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பல சிக்கல்களுக்கு மத்தியில் சில உதவிகளை செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.