கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி உக்கிரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் இறுதியில் ராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எனினும் உக்கிரேனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது இருப்பதனை தடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு கனடா உதவி செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.
யுத்தம் ஆரம்பமாகி பதினெட்டு மாதங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உக்ரேனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடாவும் நேட்டோ கூட்டுப் படையும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.