இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. என்னையும் என் சகோதரி மாயாவையும் சிறு வயதில் எங்களது தாய் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு அழைத்து செல்வார்.
மெட்ராசில் (சென்னை) இருந்த தாத்தா-பாட்டியை பார்க்க செல்வோம். எனது வாழ்க்கையில் மிகவும் முக்கிய நபர்களில் என் தாத்தா ஒருவர். என் குழந்தை பருவம் முழுவதும் நண்பர்களாக இருந்தோம்.
அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதியும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:-
“இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்திருக்கிறேன்.
இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன.