பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா உள்ளிட்ட குழுவினர் இதற்காக முன்நின்று செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டவர்களும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.