Home உலகம் சினோவெக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

சினோவெக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

by Jey

சீனாவின் சினோவெக் தடுப்பூசியை அவசர நிலைகளின் போது பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசி கொரோனா வைரஸிற்கு எதிராக வெற்றிகரமாக செயற்படுகின்றமை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து குறித்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய சர்வதேச நாடுகள் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் சினோவெக் தடுப்பூசியை பயன்படுத்த முடியும்.

தற்போதும் ஒரு சில நாடுகளிலும் தடுப்பூசி பயன்பாட்டிலுள்ளது. 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு சினோவெக் தடுப்பூசியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts