Home இந்தியா மணிப்பூரில் தொடரும் வன்முறையால் பதுங்கு குழியில் மக்கள்

மணிப்பூரில் தொடரும் வன்முறையால் பதுங்கு குழியில் மக்கள்

by Jey

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் ஏற்பட்டு தொடர்ந்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட வன்முறையால், அப்பாவி பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து வேறிடங்களுக்கு தப்பி சென்றனர்.

இந்த வன்முறை எதிரொலியாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்கள் தாக்குதலில் சேதமடைந்தன.

இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், வன்முறை அவ்வப்போது நடந்து வருகிறது. ஆயுத கிடங்கில் இருந்த ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கும்பலாக வந்து அள்ளி சென்றனர். அவற்றை திருப்பி ஒப்படைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

தொடரும் வன்முறையால் பதுங்கு குழியில் பாதுகாப்புக்காக மக்கள் பதுங்கி உள்ளனர். இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் காங்லெய் யவோல் கன்னா லப் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 12 பேரை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

அவர்களை வாகனங்களில் அழைத்து சென்றனர். அப்போது, பெண்கள் தலைமையிலான 1,500-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சென்று பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்டனர். பின்னர் படையினரை முன்னேறி செல்ல விடாமல் தடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

 

related posts