Home இலங்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

by Jey

தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் குழுவின் தாமதம் தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 70 க்கும் மேற்பட்ட விமானிகள் போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் பணியை விட்டு விலகியுள்ளதாக நிறுவனத்தின் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவிற்கு செல்லவிருந்த இலங்கை பணியாளர்கள் குழுவொன்று அந்த வாய்ப்பை அண்மையில் இழந்ததுடன், பின்னர் இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் இந்த சம்பவம் தொடர்பில் இன்று(25.06.2023) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதிய சம்பளம் மற்றும் ஊதியம் வழங்காததால், கடந்த ஒரு வருடத்தில் 70க்கும் மேற்பட்ட விமானிகள் ஏற்கனவே வேலையை விட்டு விலகியுள்ளதாகவும், மற்றொரு குழு விலக உள்ளதாகவும் அவர்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், விமான நிறுவனத்தில் 330 விமானிகள் இருக்க வேண்டியிருந்தாலும், விமான நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், தற்போது 250 விமானிகள் மட்டுமே சேவையில் உள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தற்போது விமானிகளின் பற்றாக்குறை நிலவுவதால், இதுபோன்ற அவசர காலங்களில் விமானிகளை நியமிப்பது கடினம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts