Home இந்தியா பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் – சாமி அருள்

பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் – சாமி அருள்

by Jey

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மோகன்நாத் (வயது 54). தீவிர சாய்பாபா பக்தரான இவர், தனது வீட்டில் மாதந்தோறும் சாய்பாபா பூஜை நடத்துவார். இந்த பூஜையில் சாய்பாபா பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இவர் கே.கே.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் வைத்து, புதுச்சேரியைச்சேர்ந்த சபரிநாதன் (40), ராதா என்ற சுப்புலட்சுமி (43) ஆகியோரை சந்தித்தார்.

அவர்களும் தங்களை தீவிர சாய்பாபா பக்தர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். மோகன்நாத் வீட்டில் நடந்த சாய்பாபா பூஜையில் சபரிநாதனும், ராதாவும் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென்று சாமி அருள் வந்து குறி சொல்வது போல, சபரிநாதன் நடித்தார். மோகன்நாத்தின் உறவினர்கள், அவருக்கு செய்வினை வைத்திருப்பதாகவும், அதனால் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்றும் சபரிநாதன் சொன்னார்.

அதை உண்மை என்று நம்பிய மோகன்நாத் செய்வினை கோளாறை சரி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று சபரிநாதனை கேட்டார்.

அதற்கு மாந்திரீக பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று சபரிநாதன் கூறியதாக தெரிகிறது. அதற்கு மோகன் நாத் ஒப்புக்கொண்டார். பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் என்று சபரிநாதன் சொன்னார்.

அதை ஏற்று 15 பவுன் நகைகளை மோகன் நாத் கொடுத்தார். பூஜைக்கான செலவு என்று கொஞ்சம், கொஞ்சமாக ரூ.3 லட்சம் வரை சபரிநாதன், மோகன்நாத்திடம் கறந்து விட்டார்.

related posts