Home கனடா கனடாவில் மத்திய வங்கி மீண்டும் வட்டி வீதத்தை அதிகரிக்கும்

கனடாவில் மத்திய வங்கி மீண்டும் வட்டி வீதத்தை அதிகரிக்கும்

by Jey

கனடாவில் மீண்டும் வட்டி வீதங்கள் உயர்த்தப்படும்  என தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி மீண்டும் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் மீளவும் வட்டி வீதம் உயர்த்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

வருடாந்த பணவீக்க வீதம் குறிப்பிடத்தக்களவு குறைவடையும் என்ற நிலையிலும் வட்டி வீதம் உயர்த்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணவீக்கம் நான்கு வீதத்தை விடவும் குறைவடையும் என ரீ.டி வங்கியின் பொருளியல் பிரிவு பணிப்பாளர் ஜேம்ஸ் ஒர்லாண்டோ தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு வேகம் குறைவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கனடாவின் முதன்மை வட்டி வீதம் தற்பொழுது 4.75 வீதமாக காணப்படுகின்றது.

related posts