தலைமைச்செயலகம் உழைக்கும் முதன்மை செயலமாக மாறி உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதம், திட்டத்திற்கான செலவினத்தை அதிகரிக்கும்.
திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். திட்ட பணிகளை துரிதமாகவும், தரமாகவும் நிறைவேற்றிட வேண்டும். திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மழை வெள்ளத்தால் தத்தளித்த சென்னை மாநகரம் தற்போது பெருமழை வந்தாலும் பாதிக்கப்படாது.
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மனந்திறந்து பாராட்டியதை நினைவுகூர்கிறேன்.