தமிழகத்தில் சளி பாதிப்புக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு, நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் 13 வயது சிறுமி சாதனா, சளியால் அவதிப்பட்டதால், அவரது தந்தை கருணாகரன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் ஊசி மற்றும் மாத்திரைகளை எழுதிக் கொடுத்த நிலையில், அந்த சீட்டை பார்க்காமலேயே செவிலியர் ஒருவர் சிறுமிக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார்.
ஏன் 2 ஊசி போடுகிறீர்கள் என கருணாகரன் கேட்ட போது, நாய்க்கடிக்கு 2 ஊசி தான் போட வேண்டுமென செவிலியர் சொன்னதாக கூறப்படுகிறது.
சிறுமி மயக்கமடைந்த நிலையில் அதே மருத்துவமனையில் ஒரு நாள் முழுவதும் சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக சம்பந்தப்பட்ட செவிலியரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது