பல தசாப்தங்களாக கனடிய மற்றும் அமெரிக்கர்களுக்கு பாலியல் உறவுகள் குறித்து நேர்மையான ஆலோசனைகளை வழங்கிய பாலியல் கல்வியாளர் சூ ஜோஹன்சன் காலமானார்.
93 வயதான ஜோஹன்சனின் உயிர் கனடாவின் டொரண்டோவில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் பிரிந்ததாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அவரது சண்டே நைட் பாலியல் ஆலோசனை நிகழ்ச்சி கனடாவில் மிகவும் பிரபலமானதாகும்.
வட அமெரிக்க பார்வையாளர்களுக்கும் பாலியல் கல்வி தொடர்பான ஆலோசனைகளை ஜோஹன்சன் வழங்கியிருக்கிறார்.
பதிவுசெய்யப்பட்ட செவிலியராக இருந்த ஜோஹன்சனுக்கு பாலியல் கல்வியை கற்பிப்பதில் ஆர்வம் இருந்த நிலையில் அதை தனது பணியாக செய்ய தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.