கனடாவில் காட்டுத்தீ அணைப்பு முயற்சிக்கு உதவியாக தென் கொரியாவில் இருந்து 151 தீயணைப்புப் படையினர் கனடா வந்துள்ளனர்.
இவர்கள் கியூபெக்கில் எதிர்வரும் 30 நாட்கள் பணியாற்றுவார்களென தென் கொரிய தூதரகம் அறிவித்துள்ளது.
கனடாவில் தற்போது வெளிநாடுகளைச் சேர்ந்த 1470 க்கும் அதிகமான தீயணைப்புப் படையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கனடாவில் 400 க்கும் அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள்; பதிவாகியிருந்தன. இவ்வாண்டில் இதுவரை 80,000 சதுர கிலோ மீட்டர் பகுதி காட்டுத் தீயினால் சேதமடைந்துள்ளது.