Home கனடா கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் – குறித்த நபர் மீது பிடிவிராந்து

கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் – குறித்த நபர் மீது பிடிவிராந்து

by Jey

சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டொரன்டோ பிளாசா பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் டரன்டோ நகரத்தின் ஆங்கிலேயிட்டன் அவென்யூ பிரம்லி ரோட் ஆகியவற்றுக்கு அருகாமையில் கடந்த 25 ஆம் திகதி தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 28 வயதான சர்வதேச மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் 25 வயதான டொரன்டோ நகரச் சேர்ந்த டமார் கொப்பிட் என்ற நபர் தொடர்பு பட்டிருப்பதாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தேடுவதற்காக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அது குறித்து போலீசாரிடம் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts