லண்டன் ஏரியில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனில் உள்ள சரே ஏரியில் 30களில் உள்ள பெண் அசைவற்ற நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் பெண்ணை மீட்ட போது அவர் இறந்து போயிருந்தது தெரிந்தது.
இந்த மரணத்தை தற்போது விவரிக்க முடியாததாக கருதும் பொலிஸார் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.